பிரபல ரிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக நீண்ட வருடங்கள் பணி புரிந்து பிரபலமானவர் அஞ்சனா. அதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்து கரம் பிடித்தார்.
இவர்களுக்கு, சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், பிரபல ரிவியை விட்டு விலகியிருந்த அஞ்சனா, வேறொரு ரிவியில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளியாக உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருந்தபடி நாட்களை குறித்து அன்றாடம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதில் தற்போது சேலையில் இருக்கும் அழகிய புகைப்படத்தையும், அறைகுறை ஆடையுடன் இதற்கு முன் வீட்டிலிருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார் அஞ்சனா..



















