உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் உயிர்பலி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் ஒட்டுமொத்த நெஞ்சங்களையும் கலங்க வைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இக்காட்சியில் கைக்குழந்தை ஒன்றிற்கு செவிலியர்கள் பசியைப் போக்க புட்டியில் பால் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இக்குழந்தையின் தாய் மற்றும் பாட்டிக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தையினை செவிலியர்கள் தங்களது கண்காணிப்பில் கவனித்து வருகின்றனர். குழந்தைக்கு மிக அழகாக விளையாட்டு காட்டி பசியை ஆற்றும் இவர்களுக்கு ஆயிரம் சல்யூட் அடித்தாலும் போதாது….




















