அமெரிக்காவின் நியூயார்க்கில் குடியிருக்கும் தாயார் ஒருவர் தத்தெடுக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தமது 17 பிள்ளைகளுக்கு கொரோனா நோயரை பரப்பிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுமார் 5 வாரங்களுக்கு முன்னர் கொரோனாவுக்கு இலக்கான Brittany Jencik என்பவரே, அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் தமது பிள்ளைகளுடன் சாதாரணமாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென்று அவரது உடல் நிலை மோசமடையவும், அவரது பிள்ளைகளுக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது.
உண்மையில் அந்த சம்பவம் எனக்கு திகிலூட்டுவதாக இருந்தது. எனது வாழ்க்கை குறித்து முதன் முறையாக பயம் வந்தது. கொரோனா தமக்கு எவ்வாறு தொற்றியது என்பது இதுவரை தமக்கு மர்மமாகவே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கடுமையான தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவையால் தாமும் தமது குடும்பமும் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நண்பர் ஒருவரின் நிறுவனம் சார்பில் வீடு முழுவதும் கிருமி நீக்கம் செய்துள்ளதாகவும், 12 பேர் கொண்ட குழு சுமார் இரண்டு மணி நேரம் குடியிருப்பு முழுவதும் கிருமி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் Brittany Jencik தெரிவித்துள்ளார்.
நியூயார்க் மாகாணத்தை பொறுத்தமட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 223,699 என தெரியவந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்னிக்கை 12,800 எனவும், ஒட்டுமொத்த அமெரிக்காவில் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 691,567 எனவும் தெரியவந்துள்ளது.