அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது பிணம் தின்னும் வல்லூறுகள் வட்டமிடும் கொடூர காட்சிகள் புகைப்படமாக வெளியாகி பார்ப்பவர்களை உலுக்கியுள்ளது.
நியூயார்க்கின் முக்கிய பகுதியில் வல்லூறுகள் வட்டமிட்டுள்ளது அங்குள்ள மிக மோசமான சூழலை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் நியூயார்க்கில் மட்டும் கொரோனா பாதிப்புகளால் சுமார் 7,890 பேர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளின் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் நியூயார்க் நகரம் கொரோனாவால் மொத்தமாக காலியாக இருப்பதாலும், எகிறும் மரண எண்ணிக்கையாலும், வல்லூறுகளின் இந்த வட்டமிடுதல் மிக மோசமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
வல்லூறுகள் பொதுவாக பிணக் குவியல்களில் மட்டுமே வட்டமிடும் என்பதால், பிணவாடை நகரத்தில் எழுந்துள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
உடல்கள் புதைக்கப்படாமலும், உரிய பராமரிப்பு இல்லாமலும், அழுகத் தொடங்கியுள்ளதா எனவும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை சமீப நாட்களில் குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது என ஆளுநர் Andrew Cuomo தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவானது மே மாத பகுதி வரை அமுலில் இருக்கும் என ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜூன் வரை ரத்து செய்யப்படுவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.