இலங்கையில் ஒரு புகையிரத பெட்டியில் இனி 50 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால், பயணிகள் போக்குவரத்து சேவையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரச மற்றும் தனியார் போக்குவரத்து அதிகாரிகளுடன் போக்குவரத்து மற்றும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது,
இ.போ.சவின் 5,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்துவதென தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தனியார்துறையிலுள்ள 18,000 பேருந்துகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டால், சுகாதார நெறிமுறைகளை பேணி, சமூக இடைவெளியியை பேணுவது பற்றி ஆராயப்பட்டது.
இதன்படி, பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், ஒவ்வொரு பயணிக்கிடையிலும் ஒரு மீற்றர் இடைவெளி இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
ஒரு புகையிரத பெட்டியில் 50 பேர் மாத்திரமே பயணிக்க அனுமதிப்பதென தீர்மானிக்கப்பட்டது.