ஸ்பெயினில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சவாரி செய்து வந்த ஓட்டுனருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி, பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
உலகில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவிற்கு அடுத்து ஸ்பெயின் உள்ளது. தற்போது வரை அங்கு ஒரு லட்சத்து 95-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கிருக்கும் ஓட்டுனர் ஒருவரிடம், மருத்துவர்களால் கொரோனா நோயாளியை அழைத்து செல்லும் படி கூறியுள்ளனர்.
இலவசமாக கொரோனா நோயாளிகளை அழைத்து சென்ற இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அவர் வந்த பின்னர் மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரிசையாக நின்று கை தட்டி அவரின் இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தனர்.
அதன் பின் மருத்துவர் ஒருவர் கசோலை கொண்ட செக் கொடுத்தார். இதைக் கண்ட அவர் சற்று இன்ப அதிர்ச்சியடைந்தார்.
அதன் பின் அதை கையில் வாங்கிக் கொண்டார். அவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாராட்டினர்.
இந்த வீடியோவை ஸ்பானிஷ் டாக்ஸி தொழிற்சங்கம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட, இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவரின் இந்த சேவையை பாராட்டுவதுடன், நன்றி தெரிவித்து குறிப்பிட்டு வருகின்றனர்.