நிஜ வாழ்க்கையில் டாக்டருக்கு படித்து விட்டு உண்மையிலேயே 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்ப்பதாக கூறி பெண் ஒருவரின் புகைப்படத்தினை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
வைரல் செய்யப்படும் பெண் குறித்த தகவல் உண்மையா என்பதை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
உண்மையில், புகைப்படத்தில் உள்ளவர் தமிழ் பெண்ணோ மருத்துவரோ அல்ல. அவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை நீரஜா.
100 கோடி சம்பளம் வாங்கிவிட்டு 5 ரூபாய் டாக்டர் வேடத்தில் நடித்த விஜய் உண்மையான ஹீரோவா? நிஜ வாழ்க்கையில்…
Publiée par Jenifer Chennai sur Jeudi 16 avril 2020
கடந்த 2013 முதல் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கிய நீரஜாவிற்கு முதல் தமிழ் படம் ஆரண்யம். பின்னர் 2018-ல் பூஜையுடன் தொடங்கப்பட்ட “ சிதம்பரம் ரயில்வே கேட் ” எனும் திரைப்படத்தில் அவர் நடித்து உள்ளார்.
அந்த திரைப்படத்திற்கு எடுக்கப்பட்ட புகைப்படமே இது. அப்புகைப்படத்தையே தற்போது 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் தமிழ் மருத்துவர் பவித்ரா என தவறாக வைரல் செய்து வருகிறார்கள்.
இதேவேளை, சமகாலத்திலும் ரூபாய் 5, 10, 20க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் பலர் இருக்கின்றனர். அது பலருக்கு தெரிவதில்லை. இன்னும் சொல்ல போனால் இலவசமாக கூட மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் இருக்கின்றனர்.
அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களின் புகைப்படத்தினை வெளியிட்டு நன்றி கூறினால் கடவுளுக்கு நன்றி கூறுவதற்கு நிகராகவே இருக்கும். அவர்களே நிஜ ஹீரோவும் கூட என்பது மருக்க முடியாத உண்மையே. எனவே இது போன்ற போலி புகைப்படங்களை வைரலாக்காதீர்கள்.