அவுஸ்திரேலியாவில் காதலிப்பதாக நாடகமாடி பெண் ஒருவரை தொடர்ந்து 23 நாட்கள் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
பிரிஸ்பேன் நகரில் வசித்துவரும் நிக்கோலஸ் ஜான் கிரில்லி என்பவரே பெண் ஒருவரை தமது குடியிருப்பிலும் ஹொட்டல் ஒன்றிலும் அடைத்துவைத்து கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்.
சட்ட காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத குறித்த பெண்ணை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிரில்லி கொடுமைப்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் சாவின் விளிம்பில் சென்ற குறித்த பெண்ணை, கொலை குற்றத்திற்கு பயந்து, அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்துவிட்டு, கிரில்லி மாயமாகியுள்ளார்.
2017 ஜூன் மாதம் நடந்த இச்சம்பவத்தில், 8 நாட்கள் பொலிசாரின் கடுமையான போராட்டத்திற்கு பின்னரே மாயமான கிரில்லி கைதானார்.
கிரில்லியிடம் சிக்கிய அந்த 23 நாட்களில் குறித்த பெண் தினசரி பலாத்காரத்திற்கு இரையாகியுள்ளார்.
மட்டுமின்றி அவரது உடல் மீது நெருப்பு வைத்து ரசித்துள்ளார் கிரில்லி. மட்டுமின்றி தூக்கத்தில் இருப்பவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் நீரையும் ஊற்றியதாக அவர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சொந்த கழிவுகளையே சாப்பிட வைத்ததாகவும், எப்படி சாக வேண்டும் என்ற முறையை தெரிவு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று தகவல் அறிந்து கிரில்லியின் குடியிருப்புக்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் முதலில், குறித்த பெண் இறந்ததாகவே எண்ணியுள்ளனர்.
அவரது உடம்பில் பல எலும்புகள் உடைந்த நிலையில் காணப்பட்டது. மேலும், தோல் சிதைவு உட்பட அவரது முகத்தில் ஆழமான காயங்கள், மற்றும் அவரது உடலில் 46% தீக்காயங்களும் இருந்தன.
உரிய நேரத்தில் அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்க தவறி இருந்தால், அவர் இறந்திருக்க கூடும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
கிரில்லி மீது தற்போது 54 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிரூபணமானால் கிரில்லி ஆயுள் தண்டனை அனுபவிக்க கூடும்.