பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளவர்களின் பட்டியல் என பிரபலங்களின் பெயர் அடங்கிய பட்டியல் ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், நடிகைகள் சாந்தினி, விசித்ரா, ஜெயஸ்ரீ, ரட்சிதா, தொகுப்பாளினி டிடி, சின்மயி, மீனா, ரம்யா பாண்டியன், வித்யுலேகா ராமன், சஞ்சனா சிங் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல் நடிகர்கள் விமல், சரண் சக்தி, இர்பான், ஈஸ்வர், ராதா ரவி, ரமேஷ் திலக், சத்யன், ஸ்ரீமண் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதேவேளை, டிடி கடந்த சீசனில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸிற்கு சென்று வந்திருந்தார். அந்த புகைப்படத்தினை இணையவாசிகள் பகிர்ந்து டிடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதாக வைரலாக்கி வருகின்றனர்.
இந்த பட்டியல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இந்த பட்டியல் தொடர்பாக சேனல் தரப்பில் இருந்தும் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தரப்பில் இருந்தும் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே உறுதியான தகவல் வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருங்கள்.
மேலும், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த முறை மக்கள் மத்தியில் பாரிய சாதனையை புரிந்திருந்தது. இதனால் இந்த முறை தமிழ் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.