லெபனான் நாட்டில் மலைப்பிரதேச நகரம் ஒன்றில் நபர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
சம்பவயிடத்தில் இருந்து மாயமான அந்த நபரை பொலிசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாயமான நபர் தொடர்பில் பொலிசார் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, ஆனால் அவர் சிரிய நாட்டவருக்கு எதிராக பழிவாங்குவதற்காக இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும்,
அவரது மனைவிக்கு சிரிய அகதி ஒருவருடன் தொடர்பு இருப்பதாக அவர் சந்தேகிப்பதாகக் கூறுகிறது.
சமீபத்திய மாதங்களில், லெபனான் பொருளாதார நெருக்கடி, அரசாங்க ஊழலுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அரசு விதித்த ஊரடங்குகளால் போராடி வருகிறது.
இந்த நிலையிலேயே பாக்லைன் பகுதியில் இந்தப் படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த ஆயுததாரி முதலில் அவரது மனைவி மற்றும் நான்கு சிரியர்களைக் கொன்றதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவரது சகோதரர் அவரைத் தடுக்க முயன்றபோது, குறித்த நபர் அவரையும் கொன்றுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிச் செல்லும்போது, மாயமாவதற்கு முன்பு மேலும் இரண்டு லெபனான் மற்றும் ஒரு சிரியரைக் கொன்றுள்ளார்.
குறித்த நபரை பாதுகாப்புப் படையினர் இன்னும் தேடி வருவதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.