கனடாவில் கொரோனா ஊரடங்கு வேளையில் பொலிஸ் வேடத்தில் 51 வயது நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 என அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவென கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பலரது சடலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றது.
நோவா ஸ்கோடியாவின் Portapique பகுதியில் சனிக்கிழமை அன்று முன்னெடுக்கப்பட்ட இந்த கண்மூடித்தனமான தாக்குதலை அடுத்து,
பொலிசார் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அப்போதே எச்சரிக்கை விடுத்ததுடன், குற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ள 16 பகுதிகளையும் அடையாளப்படுத்தினர்.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் நடைப்பயிற்சிக்கு வெளியே சென்ற பெண் ஒருவர், காப்பகம் ஒன்றில் பணியாற்றும் பராமரிப்பு உதவியாளர் மற்றும் ஒரு தன்னார்வ தீயணைப்பு வீரர் ஆகியோர் அடங்குவர்.