மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் அனேகமாக Dark Mode வசதி வழங்கப்பட்டுவருகின்றமை தெரிந்ததே.
அதேபோன்று Facebook Messenser அப்பிளிக்கேஷனிலும் இவ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் நீண்ட காலமாக பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் குறித்த வசதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் விரைவில் குறித்த வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பரிசோதனை முயற்சியில் உள்ள குறித்த வசதியானது கசிந்துள்ளது.
மேலும் பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதியினை தானாக செயற்படக்கூடிய வகையிலும், பயனர்களே மாற்றியமைக்கக்கூடிய வகையிலும் தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.



















