கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரன்ஸம்வேர் எனப்படும் கணினி வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தியிருந்தமை தெரிந்ததே.
இந்த வைரஸ் மூலம் தகவல்களை திருடி வைத்துக்கொண்டு ஹேக்கர்கள் நிறுவனங்களை பணம் கேட்டு மிரட்டிவந்தார்கள்.
பின்னர் ஓய்ந்திருந்த இப் பிரச்சினை தற்போது தலைதூக்கியுள்ளது.
அதாவது Zoom எனப்படும் பிரபலமான வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன் ஊடாக ரன்ஸம்வேர் அழைப்புக்களை மேற்கொண்டு ஹேக்கர்கள் பணம் கேட்டுவருகின்றனர்.
அவ்வாறு பணம் தராவிடின் தகவல்களை வெளியிடப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
சுமார் 1,000 அமெரிக்க டொலர்கள் தருமாறு இதன்போது ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான இரு புகார்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக கொல்கத்தா பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.