கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ரொரன்ரோ பொலிசார் டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், விஷ்ணு சக்திவேல் என்ற 27 வயது இளைஞன் கடைசியாக பிப்ரவரி 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு சக்திவேல் கடைசியாக Fraser Avenue and King Street West areaவில் காணப்பட்டுள்ளார்.
மேலும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட அந்த இளைஞனின் கண்கள் மற்றும் தலைமுடி பழுப்பு நிறத்தில் இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதோடு விஷ்ணு சக்திவேலின் பாதுகாப்பு குறித்து அக்கறையும், கவலையும் கொள்வதாக பொலிசார் சார்பில் கூறப்பட்டுள்ளது.
விஷ்ணு சக்திவேல் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ள நிலையில் தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர்.
Missing Man – Vishnu Sakthivel, 27
He was last seen on Tuesday, February 4, 2020 in the Fraser Avenue and King Street West area & is described as 5’8, 220 lbs., brown hair , brown eyes. Police are concerned for his safety anyone with info pls call D14, 416-808-1400#GO761877
^mf pic.twitter.com/mtXfBHQ5T2— Toronto Police Operations (@TPSOperations) April 22, 2020