முகத்திற்கு அழகை தருவதே கண்கள் தான். ஆனால் நாமோ கண்களுக்கு அதிகமான கவனத்தை செலுத்துவது இல்லை.
இதனால் கருவளையங்கள், வீங்கிய கண்கள், கண் சுருக்கம் மற்றும் சோர்வான கண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இதில் குறிப்பாக கண் சுருக்கம். இது முக அழகையே வீணாக்கி விடுகின்றது.
கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம்.
இதற்காக அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் இருந்தப்படியே சில இயற்கை பொருட்களை வைத்து கண் சுருக்கத்தை போக்க முடியும். தற்போது அது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- ஜோஜோபா எண்ணெய் – 1 தேக்கரண்டியளவு
- அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் – 1 தேக்கரண்டி
- வேப்ப எண்ணெய் – 3 முதல் 4 துளி
செய்முறை
முதலில்இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
இதன் பின்கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.
பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள்.
இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் கண் சுருக்கம் நீங்க ஆரமிக்கும்.