ஐரோப்பாவில் கொரோனாவின் முதல் தாயகமாக விளங்கிய இத்தாலியில் நீண்ட காலமாக வசித்து வரும் இலங்கையை சேர்ந்த நபர்கள் வீடு ஒன்றில், ஒன்றுகூடி விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் விருந்து வைத்தல் நிகழ்வை அறிந்த கொண்ட காவல்துறையினர் சமந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விருந்து நிகழ்வில் கலந்துக்கொண்ட குற்றங்கள் தொடர்பாக இலங்கையர்களுக்கு 300 முதல் மூவாயிரம் யூரோ வரை தண்டம் அறிவித்ததுடன், அனைவரும் தீவிர கொரோனா சோதனைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர்.
மக்களை ஒன்று கூட தடை விதிக்கபட்டுள்ளதுடன், வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என அரசு தெரிவித்து வரும் நிலையில் இவ்விதம் இலங்கையர்கள் செய்துள்ளமை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இவர்களை போல மேலும் பலர் கைது செய்யப்படும் காட்சிகளும், தண்டம் வழங்கும் காட்சிகளும் சமூக வலத்தளங்களில் வைரலாகி வருகிறது.