கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 452ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்று மட்டும் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை 118 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 327 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.