கொரோனா வைரஸ் தொடர்பாக உருவாக்கியுள்ள மூன்றாவது தடுப்பு மருந்தை இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த சீனா அனுமதி வழங்கி உள்ளது.
சீனா இதுவரை கொரோனா வைரஸுக்கான இரண்டு தடுப்பு மருந்துகளை உருவாக்கி மனிதர்களிடையே பரிசோதித்து வந்தஒ ஒநிலையில் தற்போது மூன்றாவது தடுப்பு மருந்தை இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏப்ரல் 23 வரை கணக்கின்படி, மூன்றாவது தடுப்பு மருந்து முதற்கட்ட பரிசோதனையாக 96 நபர்களுக்கு செலுத்தப்பட்டிப்பதுடன் அவர்கள் தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் விரைவில் மூன்றாம் கட்ட பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ பரிசோதனை முடிந்து அத்தடுப்பு மருந்தின் மொத்த தன்மையை அறிந்து கொள்ள ஒரு வருடகாலம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை நேற்று சீனாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 11 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை 84,311 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 4,642 பேர் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.