தமிழகத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 மகள்களை துடிதுடிக்க கொன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாந்திமீனா(வயது 40).
இவர்களுக்கு, லோகநாதன்(14) என்ற மகனும், கோகிலா(13), லலிதா(11) என்ற 2 மகள்கள் என 3 குழந்தைகள்.
கனகராஜ் இறந்துவிட்டதால், சாந்திமீனா குழந்தைகளுடன் கணவர் வீட்டாருடன் சேர்ந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19ம் திகதி வீட்டிலிருந்த 2000 ரூபாய் காணாமல் போகவே, கனகராஜின் சகோதரர் சத்தம் போட்டுள்ளார்.
சாந்திமீனா தன்னை தான் திட்டுகிறார்கள் என புரிந்து கொண்டு மன உளைச்சலில் இருந்துள்ளார்.
அன்றைய தினமே குளிர்பானத்தில் விஷம் கலந்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த பிள்ளைகளை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போயினர்.
இதனால் மேலும் துக்கத்தில் இருந்த சாந்திமீனா, கிராம நிர்வாக அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
அவர் மணப்பாறை பொலிசாருக்கு தகவல் அளிக்க பொலிசார் சாந்திமீனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.