முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஊடாக, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை, கட்சி உறுப்புரிமையிலிருந்து விலக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி உறுப்புரிமையிலிருந்து அவர்களை நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதேவேளை, வேறு கட்சிகளுடன் இணைந்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களின், உறுப்பினர் பதவியையும் பறித்து, புதியவர்களை இணைப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.