லண்டன் மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த 34 வயது ஆண் நர்ஸ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
St George மருத்துவமனையில் பணிபுரிந்தவர் Ken Lambatan (34). இவர் தான் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த சுகாதார ஊழியர்களுக்கு ஒரு நிமிடம் நாட்டில் மெளன அஞ்சலி செலுத்துவதற்கு சற்றுமுன்னர் தான் Ken மரணம் குறித்து அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் St George மருத்துவமனையின் தலைமை நிர்வாகி Jacqueline Totterdell விடுத்துள்ள அறிக்கையில், எங்கள் இருதய ஆராய்ச்சி நர்ஸ்களில் ஒருவரான Ken உயிரிழந்தது எங்கள் மருத்துவமனையில் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
Ken ஊழியர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார், மேலும் அவரை நன்கு அறிந்தவர்களால் உண்மையான மனிதர் என வர்ணிக்கப்பட்டார்.
தனது பணியில் அர்ப்பணிப்பாக செயல்பட்ட அவர் ஊழியர்களுடன் பிரபலமாக இருந்ததைப் போலவே நோயாளிகளிடமும் பிரபலமாக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ken நண்பர்கள் கூறுகையில், அவர் நல்ல ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தார்.
அவரின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது என கூறியுள்ளனர்.