கொரோனாவால் விழி பிதுங்கி நிற்கும் நாடுகளில் ஒன்றான இத்தாலி, தற்போது நெரிசல் மிகுந்த சிறைச்சாலைகளில் இருந்து கைதிகளை விடுவிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இதில், போதை மருந்து கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட மிகக் கொடூரமான குற்றங்களால் தண்டனை அனுபவித்துவரும் சுமார் 30 கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ப்ரும்பாலான கைதிகள் வீட்டுச்சிறையில் இருந்தவர்கள் என்பதால், அவர்களை விடுவிப்பதால் ஆபத்து குறைவு என அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட கைதிகளில் முக்கியமானவர், இத்தாலியில் பின்லேடன் என அறியப்படும் 60 வயதான Pasquale Zagaria.
20 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ள இவர், தற்போது புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்னொரு முக்கிய குற்றவாளியான 78 வயது Francesco Bonura கொரோனாவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 2006 முதல் சிறையில் இருந்து வந்துள்ளார் இவர்.
கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் இன்னொருவர், 66 வயதான Vincenzo Iannazzo,
மிகக் கொடூர குற்றவாளி என அரசு தரப்பே அறிவித்துள்ள இவர், கடந்த 2015 முதல் சிறையில் இருந்து வருகிறார். தற்போது கொரோனாவால் விடுவிக்கப்பட்டுள்ளார்.