பிரான்ஸில் பல் மருத்துவர்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு கூறி நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைக்கு உள்ளேயே ஆங்காங்கே பெண் மற்றும் ஆண் பல் மருத்துவர்கள் போராட்டம் செய்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பிரான்ஸில் பல் மருத்துவர்கள் பலருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை, ஏனெனில் பற்றாக்குறை நிலவுகிறது.
நாங்கள் நோயாளிகள் அருகில் சென்று தான் சிகிச்சையளிக்க வேண்டும், அதனால் எங்களுக்கு மாஸ்க், கிளவுஸ் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அவசியமாகும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே பிரான்ஸ் அரசு, பல் மருத்துவர்களுக்கு 150,000 பாதுகாப்பு உபகரணங்களை லாக்டவுன் முழுவதுமாக முடிந்த பின்னர் கொடுக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையில் மருத்துவர்கள் நிர்வாணமாக போராடிய விடயம் இன்ஸ்டாகிராமில் #dentisteapoil என்ற ஹேஷ்டேக்கில் பகிரப்பட்டுள்ளது.