கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த நோய் தொற்று ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் மைக்கல் ஒஸ்டர்ஹோம் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது…
முன்பு உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய இன்புளூன்ஸா வைரஸ் தொற்றைக் காட்டிலும் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று, மனிதர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஆரோக்கியமான மனிதர்களையும் கூட இந்த வைரஸ் தாக்குகிறது.
இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளில் உலகமே ஈடுபட்டுள்ளது. கொரோனா வைரஸை பொறுத்தவரை, அது முற்றிலுமாக ஒழிவதற்கு குறைந்தபட்சம் இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வரை இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது. எனவே, வைரஸ் மத்தியில் 2 ஆண்டுகள் வாழ்வதற்கு மக்களை அரசாங்கம் தயார்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.