ஹட்டன் எபோட்ஸிலி தோட்டத்தில் லயன் தொகுதி வீடுகளில் இன்று இரவு தீ பரவியதால் 9 வீடுகள் தீக்கிரையாகி உள்ளது.
14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கிறது.
அத்துடன் இந்த தீ விபத்தில் 9 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
மேலும் 5 வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 50 பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.