நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஹங்குரங்கெத்த திக்கல்பொத்த பிரதேசத்தில் இனங்காணப்பட்ட குறித்த நோயாளி வெலிசற கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில் கடந்த 21ம் திகதி விடுமுறையில் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் நெருங்கிப் பழகிய 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.