இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று இரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 702ஆக அதிகரித்துள்ளது.
172 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 523 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.