வட கொரிய-தென் கொரிய இடையேயான எல்லையில் இரு நாடு வீரர்களிடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட 3 வாரங்கள் பொதுவில் தோன்றாதா வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஒரு நாள் கழித்து இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
கிம் உடல்நலம் மற்றும் இருப்பிடம் குறித்து பல வாரங்களாக கடுமையான ஊகங்களுக்குப் பிறகு, நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் சனிக்கிழமையன்று அவரது கிம் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களுடன் ஒரு அறிக்கையையும் வெளியிட்டன.
இந்நிலையில், வட கொரியாவிலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 7:41 மணியளவில் தென் கொரியாவை நோக்கி பல துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக தெற்கின் கூட்டுத் தலைவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியா, வட கொரியா நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.