ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த இந்தியர்கள் இஸ்லாம் குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டதை அடுத்து, அவர்கள் வேலையில் இருந்து நீங்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சைகுரிய வகையில், பதிவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று இந்திய அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்தது. இதனால், பல இந்தியர்கள், கடும் நடவடிக்கைக்குள்ளாகினர்.
அதன்படி தற்போது, துபாய் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த ராவத் ரோஹித் மற்றும் ஒரு நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவரும் இஸ்லாம் குறித்து அவதூறாக சமூக வலைதள பக்கத்தில் எழுதியதால், வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஷார்ஜாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆட்டோமேஷன் நிறுவனம் தன்னிடம் காசாளராக பணிபுரிந்து வந்த ஊழியர் இஸ்லாம் குறித்து அவதூறாக பதிவிட்டதால் வேலையில் இருந்து நீங்கி விட்டதாக அறிவித்துள்ளது. அவரது ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை முடிந்த பின் வழங்குவது குறித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 20ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தியத் தூதர் பவன் கபூர், அங்குள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து டிவிட் செய்திருந்தார். அதில் “இந்தியாவும் -ஐக்கிய அரபு அமீரகமும் எந்த அடிப்படையிலும் வேறுபாடு பார்ப்பதில்லை. நம்முடைய ஒழுக்கத்துக்கும், சட்டத்துக்கும் மாறான பாகுப்பாடு காட்டுவது, முறையற்றது என்று தெரிவித்திருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.