ஸ்ரீலங்காவில் இன்று அதிகாலையின் வெளியான தகவலின் படி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு சற்றுமுன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு வெளியான தகவலின்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 824ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 232 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.