பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த தமிழர் தமது குழந்தைகளை கொன்று தாமும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், குழந்தைகள் எவ்வாறு இறந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இல்ஃபோர்ட் பகுதியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி ஞாயிறன்று 40 வயதான நிதின் குமார் குடும்ப பிரச்சனை காரணமாக 19 மாதமேயான பவின்யா மற்றும் 3 வயதான நிகாஷ் ஆகிய இரு பிள்ளைகளையும் கழுத்தில் காயப்படுத்தி கொன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்கு பின்னர் தற்கொலைக்கு முயன்ற நிதின் குமார் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ள நிலையில், சிறுவன் நிகாஷ் தந்தையால் கழுத்தறுபட்டு மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றுயிரான நிலையில் மீட்கப்பட்ட நிகாஷ் உள்ளூர் நேரப்படி சுமார் 7.42 மணியளவில் மரணமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 28 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட உடற் கூராய்விலும், கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயம் காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
மட்டுமின்றி குழந்தை பவின்யாவும் கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயம் காரணமாகவே இறந்துள்ளது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் ஒருபகுதியாக மரணமடைந்த இரு சிறார்களையும் அவர்களது தாயார் நிஷா அடையாளம் கண்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும், மேலதிக விசாரணை தேவை எனவும் நீதிமன்றத்தில் அதிகாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.