பிரித்தானியாவில் இந்த ஊரடங்கில் அதாவது முதல் ஆறு வாரங்களில் 19 பெண்கள் வீட்டு வன்முறையால் உயிரிழந்துள்ளதால், இது கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகம் என தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால், வீட்டில் இருக்கும் பல பெண்கள் தங்களின் விருப்பமில்லாமல் பலியல் பலாத்காரம் செய்யப்படலாம், மிகப் பெரும் துயரை சந்திக்கலாம் என்று கூறப்பட்டது.
இதற்காக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த ஊரடங்கு நேரத்தில் 19 பெண்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 4 பேர் உயிரிழப்பு குறித்து சரியான தகவல் இல்லாததால், இது 23-ஆகவும் உயரலாம் என்று ஆண்களால் பெண்கள் கொல்லப்பட்டதை பதிவு செய்யும் தரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் ஆணையர்(Victims Commissioner )Dame Vera Baird, இது தொற்றுநோய்க்குள் ஒரு தொற்றுநோய், மக்கள் தப்பிப்பது கடினம் என்று கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களில் எல்சி ஸ்மித், என்ற 71 வயது பெண் மார்ச் 25 அன்று தனது கணவர் ஆலன் தன்னை கொலை செய்வதற்கு முன்பு குத்தியதாக விசாரணையில் தெரிவித்தார்.
40 வயதான கெல்லி பிட்ஸ்கிபன்ஸ் என்பவர் தன்னுடைய இரண்டு மகள்களான லெக்ஸி மற்றும் அவா, ஆகியோருடன் மார்ச் 29-ஆம் திகதி அன்று இறந்து கிடந்தார்.
இது போன்று கடந்த ஆறு வாரங்களில் குறைந்த பட்சம் 1 இறப்புகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 12 பேர், 2018-ஆம் கால கட்டத்தில் எட்டு பேராகவும் இருந்தனர்.
கடந்த எட்டு ஆண்டுகளை விட இப்போது வீட்டு வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.