யாழ்ப்பாணம் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் இருந்து சிகிச்சை பெற்ற 160 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்த நிலையில் அவர்களது வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து கடந்த மாதம் 22 ஆம் திகதி கொவிட் -19 தொற்று தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டு சுய தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட 160 பேரில் 78 முதியவர்களும், 82 சிறுவர்களும், சிகிச்சை பெற்று இயக்கச்சி 55வது, படைப்பிரிவில் இருந்து கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி ரூவான் வணிகசூரிய தலைமையில் இராணுவத்தினரால் அவர்களின் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன்போது, பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.