அரசியல் அமைப்பிற்கு இணங்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செலவிடுகின்றார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மீது குற்றம் சுமத்தி வரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றிற்கு காணப்படும் நிதி குறித்த அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியைச் சாரும், இது அரசியல் அமைப்பிற்கு அமைவானது.
புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கான திகதியிலிருந்து மூன்று மாதங்கள் வரையில் அரச செலவுகளுக்காக ஜனாதிபதியினால் நிதி ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும் என அரசியல் அமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.