இன்று காலை 6.00 மணியுடன் நிறைவுக்கு வந்த கடந்த 24 மணி நேர காலப் பகுதியில் 799 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த காலகட்டத்தில் 206 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி மார்ச் 20 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 51,552 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 13,350 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
23 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் , இரவு 8 மணிக்கு மீளவும் பிறப்பிக்கப்படும்.
எனினும், கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.