உக்ரைன் நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்தை வெட்டி கொலை செய்து, அவரின் உடல் பாகங்களை சமைத்த தந்தை மற்றும் மகனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாக்சிம் மற்றும் யாரோஸ்லாவ் ஆகியோர் உக்ரைனில் யெவ்ஜெனி பெட்ரோ(45) என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தந்தை மற்றும் மகன் இருவருக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயதான மாக்சிம் அவரது 21 வயதான மகன் யாரோஸ்லாவ் ஆகிய இருவரும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான யெவ்ஜெனி பெட்ரோ உடன் சம்பவத்தன்று மது அருத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியில் கெய்வின் படைகளுக்கும் மாஸ்கோ சார்பு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தந்தையும் மகனும் யெவ்ஜெனி பெட்ரோவை கொலை செய்துள்ளனர்.
யாரோஸ்லாவ் கூரான கத்தியால் பெட்ரோவின் கழுத்தை துண்டித்து, அவரது இதயம் உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் தனித்தனியாக வெட்டி எடுத்துள்ளார்.
பின்னர் அந்த உடல் பாகங்களை சமைத்து, ஆதரவற்ற யுரா என்பவருக்கு சாப்பிட அளித்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த மாமிசங்களை யுராவுடன் இணைந்து தந்தையும் மகனும் சாப்பிட்டதாக பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிறுவியுள்ளது.
மேலும், தலை உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இல்லாத சடலம் ஒன்றை பொலிசார் கைப்பற்றியதுடன், ஆய்வில் அது காணாமல் போன முன்னாள் பொலிஸ் அதிகாரியின் சடலம் எனவும் உறுதி செய்யப்பட்டது.