கொரோனா வரவினால் இலங்கையில் மதுபான நுகர்வு 80 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அல்கஹோல் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தாக்கத்தினைத் தொடர்ந்து இந்த நிலைமை உருவாகியுள்ளது.
மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பு நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மது அருந்தும் மற்றும் புகை பிடிக்கும் நபர்களிடம் நடத்தப்பட்டுள்ளது.
மதுபான வகைகள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் மது அருந்தவில்லை என கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 84 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தொற்று பரவிய காலப் பகுதியில் மது அருந்தாத காரணத்தினால் வீட்டு வன்முறைகள் குறைந்துள்ளதாகவும், பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளதாவும் கூறப்படுகின்றது.