நியூசிலாந்தில் பிரபல உணவகம் ஒன்று அதிக கூட்டம் காரணமாக சமூக விலகலை பின்பற்றும் நோக்கில் பிரதமர் ஜெசிந்தாவை உணவருந்த மறுப்பு தெரிவித்துள்ளது.
வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள ஆலிவ் உணவகத்தில் பிரதமர் ஜெசிந்தா மற்றும் அவரது வருங்கால கணவர் கிளார்க் கெய்போர்ட் ஆகிய இருவரும் சனிக்கிழமை காலை உணவருந்த சென்றுள்ளனர்.
ஆனால் அந்த உணவகத்தில் அரசு அறிவுறுத்திய அளவுக்கு கூட்டம் இருந்துள்ளதால், வேறு வழியின்றி பிரதமர் ஜெசிந்தா உணவருந்தாமல் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நாடு முழுவதும் சமூக வலைதளத்தில் காட்டுத் தீயாக பரவியது.
கொரோனா பாதிப்பை அடுத்து நியூசிலாந்து மக்கள் கடந்த வியாழக்கிழமை முதல் மெதுவாக சாதாரண நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன, ஆனால் வாடிக்கையாளர்களை மற்றவர்களிடமிருந்து ஒரு மீற்றர் இடைவெளியை கடை;பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, 10 பேர்களுக்கு மேற்பட்டவர்களையும் உணவகங்களில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் ஜெசிந்தா மற்றும் கெய்போர்ட் இருவரும் சிறிது நேரம் காத்திருந்து, உணவருந்தி சென்றதாக கூறப்படுகிறது.
அரசு அறிவித்த நெறிமுறைகளை உணவகங்கள் கடைபிடிப்பதை பாராட்டிய கெய்போர்ட் சேவைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.