சுகாதார அதிகாரிகளின் இணக்கப்பாட்டுடன் கூடியவிரைவில் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தவேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தேர்தலை நடத்துவதை தாமதிக்க கூடாது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது கடந்த தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு மாறான விடயம்.
கொவிட் 19 நிதிகள் செலவிடப்பட்டமை குறித்த விடயங்கள் பற்றி புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் ஆராயலாம்.
எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்சிசி உடன்டிபடிக்கையில் கைச்சாத்திடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.