பிரித்தானியாவில் கட்டுப்பாடுகளை எளிதாக்கத் தொடங்கும் போது அரசாங்கத்தின் சில புதிய கொரோனா வைரஸ் விதிகளால் மக்கள் விரக்தியடைவார்கள் என பிரதமர் போரிஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் செய்யப்படாத ஒன்றை நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம். புதிய விதிகளைக் கடைப்பிடிப்பதில் பிரித்தானியா மக்களின் நல்ல உணர்வை நம்புவதாகவும், இதுவரை தங்களுடன் இணைந்து செயல்பட்டதற்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
சில புதிய விதிகள் குறித்து மக்கள் விரக்தியடைவார்கள் என்று பிரதமர் கூறினார், மேலும் பாதுகாப்பான மற்றும் இதுவரை நாம் அனைவரும் மேற்கொண்ட கடின உழைப்பிற்கு ஆபத்து ஏற்படாத வகையில் நாட்டை முழு ஊரடங்கிலிருந்து வெளியேற்ற உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா நான்கு உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்டது, அவற்றில் மூன்று நாடுகளான வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து தங்கள் ‘வீட்டிற்குள்ளே தங்கும்’ உத்தரவுகளை தளர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.