உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பல திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனால், தாங்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், தங்களது அன்றாட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி, தற்போது, விராட் கோலி டைனோசராக நடித்துக் காட்டிய வீடியோவை அனுஷ்கா பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டைனோசர் போல நடந்து வரும் கோலி கடைசியில் அதேபோல ஒலி எழுப்பி செல்கிறார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இது க்யூட்டான டைனோசர் என பதிவிட்டு வருகின்றனர்.