கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்க பிரித்தானியாவுக்கு வரும் மக்கள் ஜூன் 8 முதல் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பயணிகள் தாங்கள் எங்கு தனிமைப்படுத்தப்படுவோம் என்று அரசாங்கத்திடம் சொல்ல வேண்டும்.
பயணிகள் தனிமைப்படுத்தல் விதிகளை சரியாக கடைப்பிடிக்கிறார்களா என்று திடீர் சோதனை மேற்கொள்ளப்படும், விதிகளை கடைப்பிடிக்க தவறுபவர்களுக்கு 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எங்கள் எல்லையை கடக்கும் வழக்குகளின் அபாயத்தை குறைக்கும் என்று உள்துறை செயலாளர் பிரிதி படேல் கூறினார்.
லொறி ஓட்டுநர்கள், பருவகால பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் கொரோனா வைரஸ் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
அயர்லாந்து குடியரசு, சேனல் தீவுகள் மற்றும் he Isle of Man ஆகியவற்றிலிருந்து பயணிப்பவர்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தாது.
பிரித்தானியாவுக்கு வரும் நபருக்கு தனிமைப்படுத்த சரியான தங்குமிடம் இல்லையென்றால், அந்த நபரின் சொந்த செலவில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வசதிகளில் தங்க வேண்டியிருக்கும் என்று எல்லைப் படைத் தலைவர் பால் லிங்கன் தெரிவித்துள்ளார்.
உள்துறை அலுவலகத்தின்படி, புதிய விதிகள் பிரித்தானியா முழுவதும் நடைமுறையில் இருக்கும், இருப்பினும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட நிர்வாகங்களால் தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளது.