பிரித்தானியாவை சேர்ந்த 62 வயது பெண் பேஸ்புக்கில் 26 வயது இளைஞனுடன் தவறுதலாக நட்பான நிலையில் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த 62 வயது பெண் Isabell Dibble. இவருக்கு மூன்று முறை திருமணம் ஆன நிலையில் மூவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கடந்தாண்டு Isabell Dibble, Tunisia நாட்டுக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது அங்குள்ள காபி ஷாப்புக்கு Isabell சென்ற போது Bayram என்ற ஊழியருடன் நட்பாகியுள்ளார்.
பின்னர் சொந்த நாட்டுக்கு அவர் திரும்பிய நிலையில் காபி ஷாப் ஊழியர் Bayram உடன் பேஸ்புக் மூலம் நட்பாக விரும்பினார். ஆனால் தவறுதலாக அதே நாட்டை சேர்ந்த Bayram என்ற பெயரை கொண்ட வேறு இளைஞருடன் பேஸ்புக்கில் பேசினார்.
இதையடுத்து அந்த இளைஞர், நீங்கள் நினைக்கும் நபர் நான் இல்லை என கூறினார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து பேசி நட்பானார்கள்.
பேஸ்புக் நட்பு போன் நட்பாக மாறி மணிக்கணக்கில் போனில் பேசினார்கள். நட்பானது காதலாக மாறி இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்க தொடங்கினார்கள்.
இதை தொடர்ந்து Tunisiaவுக்கு சென்று காதலன் Bayram-ஐ Isabell சந்தித்தார். பின்னர் இருவருக்கும் அங்கேயே கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இது குறித்து Isabell கூறுகையில், எங்கள் காதல் கதையே சுவாரசியமானது தான், பேஸ்புக்கில் தவறுதலாக ஏற்பட்ட நட்பால் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
முதலில் எங்கள் வயது வித்தியாசத்தை நினைத்து இரு குடும்பத்தாரும் பயந்தார்கள். எனக்கு பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
நான் மூன்று கணவர்களை இழந்தவள், நான் மனதால் இளமையாகவே உள்ளேன் என கூறினார். Bayram கூறுகையில், நாங்கள் முதலில் சந்திப்பதற்கு முன்னர் 6 மாதங்கள் போனிலேயே பேசினோம்.
நான் என் மனைவியை வயதான பெண்ணாக பார்க்கவில்லை, அவரை நல்ல குணமுள்ள பெண்ணாகவே பார்க்கிறேன் என கூறியுள்ளார்.