உலகெங்கும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்காக நிதி திரட்டும் வகையில் துபாய் சிறுமி ஒருவர் விசித்திர சவாலை எதிர்கொண்டுள்ளார்.
தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சாரா கான் என்ற 11 வயது சிறுமி உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உயரத்தை நடந்து கடக்க முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தின் முன்னாள் ராணுவ வீரர் 100 வயதான கேப்டன் சர் டாம் மூரால் நான் ஈர்க்கப்பட்டேன் என கூறும் சாரா கான்,
தமது குடியிருப்பில் அமைந்துள்ள படிக்கட்டில் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உயரமான 828 மீற்றரை ஒரே மூச்சில் நடந்து கடந்துள்ளார்.
இதற்கு அவர் 63 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதாகவும், இதன் மூலம் தமக்கு இதுவரை 3,500 டொலர்கள் சேர்ந்துள்ளதாகவும், இன்னும் 6 நட்கள் இதே திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெர்வித்துள்ள சாரா கான், இந்த சவால் முடிவடையும் வரை இயன்ற நிதியுதவி அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.