தோட்டத் தொழிலாளர்களிற்கு விரைவில் 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும். ஆறுமுகன் தொண்டமான் என்னிடம் இறுதியாக கேட்ட விடயமும் இதுதான்“ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதனை தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தின் ஆரம்பத்தில், ஆறுமுகன் தொண்டமான் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரஸ்தாபித்தார்.
நேற்று அவர் காலமாகுவதற்கு முன்னதாக தன்னை சந்தித்து பேசிக் கொண்டிருந்ததை பிரதமர் குறிப்பிட்டார். தோட்டத் தொழிலாளர்களிற்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும், ஈ.பி.எவ் கொடுப்பனவு பற்றி பேசினார்.
இதை பேசி சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்து விட்டார். அவரது இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.