குவைத் நாட்டின் ஆட்சியாளரை அவமதித்ததாக கூறி இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்களை விமர்சித்து சமூக ஊடங்களில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட இலங்கை பெண், குவைத் ஆட்சியாளரினால் இலங்கை பணியார்கள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி கொரோனா பரவ இடமளித்து சுகாதார பாதுகாப்பினை மீறி இலங்கைக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
குவைத் அரசர் ஒரு நாய். மனிதன் அல்ல. மனிதன் என்றால் கொரோனா தொற்று நீங்கும் வரை தங்க இடமளித்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அரச துரோக குற்றச்சாட்டின் கீழ் குறைந்த பட்சம் அவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.