உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், எப்பேற்பட்ட கிருமிகளும் உடலினுள் உயிர் வாழ முடியாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
அதிலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் மற்றும் பானங்களை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் தற்போது பழங்காலம் முதலாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குடித்து வந்த அற்புத பானம் ஒன்றினை எப்படி தயாரிக்கலாம் என இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- தண்ணீர் – 1 கப்
- துருவிய இஞ்சி – 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்
- தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
கலவையானது நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்து, கலவையை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்க வேண்டும்.
அதன் பின் தேன் சேர்த்து கலந்தால், பானம் குடிப்பதற்கு தயார்.
இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்து விலகி பாதுகாப்புடன் இருக்க முடியும்.
முக்கிய குறிப்பு
- ஆப்பிள் சீடர் வினிகரை எப்போதும் கொதிக்க வைக்கக்கூடாது.
- ஆப்பிள் சீடர் வினிகரை குளிர்ச்சியான அல்லது வெதுவெதுப்பான நீருடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.



















