ஈரானில் கொரோனா வைரஸ் முதல் நோயாளி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சி முன்பே அங்கு கொரோனா பாதிப்பு துவங்கவிட்டதாக கூறி, தெருக்களில் நிலைகுலைந்து கிடக்கும் மக்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில், 146,668பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7,677 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் ஈரான் உண்மையான இறப்பு எண்ணிக்கையை மூடி மறைப்பதாகவும், அது இதை விட ஐந்து மடங்கு அதிகம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், அமெரிக்க பொருளாதாரத் தடைகள் ஈரான் மீது தொடர்வதால், சீனாவின் ஆதரவைப் ஈரான் பெரிதும் நம்பியுள்ளது.
இதனால் அந்நாட்டிற்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் ஈரான் இந்த விஷயத்தில் மூடி மறைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் முதல் கொரோனா வைரஸ் நோயாளியை, பிப்ரவரி 19-ஆம் திகதி அன்று பதிவு செய்தது. தற்போது வரை நாட்டில் 7,417 பேர் மட்டுமே வைரஸால் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் என்.சி.ஆர்.ஐ ஈரானில் வைரஸால் இறந்தவர்கள் 320 நகரங்களில் 43,800 பேரை தாண்டிவிட்டதாக மதிப்பிடுகிறது.
இந்நிலையில் ஈரானில் கொரோனா முதல் நோயாளி என்று கூறப்படும் பிப்ரவரி மாதத்திற்கு முன்பே தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதற்கான வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வீடியோவை பிரபல ஆங்கில ஊடகம் சரி பார்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், அந்த வீடியோவில் ஒரு நபர் தென்கிழக்கு ஈரானின் ஜாகேடனில் நிலை தடுமாறி, இருமல் மற்றும் வேதனையுடன் காணப்படுகிறார்.
மற்றொரு இடத்தில் இன்னொரு நபர் ஒரு ஷாப்பிங் சென்டர் போல் இருக்கும் தரையில் இருமிய படி கிடக்கிறார்.
இதே போன்று தெருக்களிலும் சிலர் விழுந்து கிடப்பதால், ஈரான் கொரோனா விஷயத்தில் உண்மையை மறைக்கிறதோ என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.