இரத்மலானையில் இலவசமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகித்த இளம் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான இரத்மலானை அஞ்சு (டிலான் குமார சிபேர) தற்போது நாட்டிலிருந்து தப்பியோடி, தற்போது டுபாயில் பதுங்கியிருக்கிறார். அங்கிருந்தபடி, இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தி வருகிறார்.
அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு இலவசமாக போதைப்பொருளை விநியோகிக்கும்படி, ஜயனி மலகாந்தி பெர்னாண்டோ (31) என்ற பெண்ணிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இரத்மலானையை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு, இந்தப் பெண் இலவசமாக போதைப்பொருளை விநியோகித்துள்ளார்.