கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகை மீரா சோப்ரா ட்விட்டரில் தனது ரசிகர்களிடம் உரையாற்றினார். இதில், தான் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகை இல்லை என்றும், தனக்கு மகேஷ் பாபுவை அதிகளவு பிடிக்கும் என்றும் கூறியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள், மீரா சோப்ராவை தொடர்ந்து அவதூறாக பேசி வந்தனர். மேலும், பல மிரட்டல் பதிவுகளும் வந்துள்ளது. இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான மீரா சோப்ரா, காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரில், தனக்கு வந்திருந்த ஆபாச கருத்துக்கள் குறித்த புகைப்படத்தை காவல் துறையினரிடம் சமர்ப்பித்து புகார் வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாக இருப்பதாகவும், பெண்களின் ஆணையம் மற்றும் ரேகா சர்மாவின் நடவடிக்கைள் மூலமாக ஆதரவு மற்றும் வலிமையை பெறுவதாக ட்விட் செய்துள்ளார். இதனைப்போன்று, மகேஷ் பாபுவின் ரசிகராக இருப்பது பெரிய குற்றம் என்று தனக்கு எதெரியது என்றும் கூறியுள்ளார்.
@hydcitypolice @CyberCrimeshyd i would like to report all these accounts. They are talking abt gang banging, are abusive and death threatning. Unfortunately they are all @tarak9999 fanclubs. @Twitter i would request you to look into it and suspend these accounts. pic.twitter.com/7bBEz2fZHh
— meera chopra (@MeerraChopra) June 2, 2020